விகட கவி வார்த்தை போல அமைந்த கவிதைகள்

முன் குறிப்பு :படிக்கும் முறை படிக்கவும் :இது போல் அமையும் வார்த்தை கவிகளுக்கு மாலை மாற்று கவிதை என பெயரிட்டு அழைகின்றனர்.
______________________________________________

1.நீசிவா கதே பதிநீ
நீ தீப தேக வாசி நீ

2.நீரேநீ பத ஸ்ரீ வாசா நீ
நீசாவா ஸ்ரீதப நீரேநீ

3.நீயாகா வடிவ ஒம் நிலைநீ
நிலைநீஒம் வடிவ காயா நீ

4.நீஅக்ஷர வேதா மாவர்சநீ
நீ சர்வ(மா தாவே ரக்ஷா(அ)நீ
---------------------------------------------------------------------------

1.படிக்கும் முறை :1. நீ சிவா சுப நிலைநீ
நிலைநீ பசு வாசி நீ

1.இதை விகட கவி வார்த்தையை எப்படி முன் இருந்தும் பின் இருந்தும் படிப்போமோ அப்டி படிக்க வேண்டும்
2. முதலில் 1.நீ 2. சி .3. வா 4.சு 5. ப ----இந்த வரிசையில் படி க்கவும்
3. இப்பொழுது கடைசியில் இருந்து படிக்கவும்

''''''''பசு வாசி நீ''''''''
இந்த வரியை கடைசியில் இருந்து படிக்கு பொழுது நாம் இப்படி படிப்போம் 1.நீ 2.சி 3. வா 4.சு 5.ப என்று படிப்போம் அப்படி படித்தால் ஒரே வரி போல் வரும் ....இதையே முன் இருந்து பின் இருந்து படித்தல் ஒரே போல் வரும் விகட கவி வார்த்தை போல் வரும்'''
_______________________________________________
பொருள் :
1.நீசிவா கதே பதிநீ
நீ தீப தேக வாசி நீ
நீ சிவா கதை (சிவ புராணத்தில் ) பதி நீ
நீ தீபம் மற்றும் தேகம் வசிப்பவன் நீ
------------------------------------------------------------------------
2.நீரேநீ பத ஸ்ரீ வாசா நீ
நீ சாவா ஸ்ரீதப நீரேநீ
நீரே ஸ்ரீ என்ற பதத்தில் வசிப்பவன் நீ சாகாத ஸ்ரீ (திரு )தபம் நீயே
_____________________________________________
3.நீயாகா வடிவ ஒம் நிலைநீ
நிலைநீஒம் வடிவ காயா நீ
நீ யாகத்தின் வடிவன் ஒம் நிலையும் நீ நீயே ஒம் வடிவத்தில் உள்ள உடல் நீ (காயா) உடலின் சாரம் ஒம் (அத்மா)என்ற அடிப்படையில்
____________________________________________
4.நீஅக்ஷர வேதா மாவர்சநீ
நீ சர்வ(மா தாவே ரக்ஷா(அ)நீ
நீ அக்ஷர வேதத்தின் மலை நீ நீயே சர்வ மாதா நீயே ரக்ஷா (பாது காப்பு ) ரக்ஷா வில் அ மறைவு
ச் +அ =சா என்பது போல்
------------------------------------------------------------------------

எழுதியவர் : குருவருள் கவி (25-Apr-14, 5:25 pm)
பார்வை : 426

மேலே