தீண்டலின் மையமாய்
சுடும் தீண்டலின் மையமாய்
ஒன்றிரண்டாய் நொறுங்கிப்போகும் மௌனம்..
விழி அடைத்து வழியும் புன்னகையில்
காதலின் சாரமாகும் இதழின் வரிகள்..
உடுத்திக்கொண்ட உன்மத்தம் உடையும் கணம்
சிலந்தியின் இரைமுழுங்கும் ஆவேசம்
அதன் மூச்சு துளையிடும் மூங்கில் காட்டில்,
ஊதலின் ஒலி காதடைக்கும்..
மிச்சங்களை மறுபடியும் மறுபடியும்
கிடத்திப் பார்க்கும்..
வியர்வை வரைந்திருக்கும் கீறல்களை
சதைகள் சாப்பிட்டிருக்கும்..
சுட்டெரிந்து போன சரீரம்,
சாரலுக்காகக் காத்திருக்கும்,
சாம்பலாய் நிறம் மாறி..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
