மனச தொறந்து சொல்லு மாமா-வித்யா
ஊரறிய விழிக்காம
உள்ளூர உறங்குது
உன் மேல நான்
வச்ச ஆசையெல்லாம்.......!
தனியா நான் பேச..
காத்து கருப்பு
புடிச்சிருக்குன்னு
மந்திரிச்சி கருப்பு கயிறு
கட்டிபோனா உன் அத்தை.......!
உன் காத்தும்
உன் கருப்பும்
தான் புடிச்சுருக்குன்னு
தெரிஞ்சிருந்தும்
மஞ்சகயிறு கட்டாம
கண்ணாமூச்சி ஆடுறதேன் மாமா....?
ராத்திரி கண்ட
கனவெல்லாம்
பகல் கனவா போயிடுமோ......?
நெழலு பட்டா
நோகும்முன்னா....
தள்ளி தள்ளி நீ நடந்த...?
காத்து பட்டா
நோகுமுன்னா.....
மூச்சடக்கி நீ பறந்த.....?
மனசெல்லாம்
ஆசவச்சும்
மறச்சு நீ
மருகுறதேன்....?
கண்டா
ஒதுங்குறதேன்..?
காணாம
கரையுறதேன்.....?
ஒருவாட்டி....ஒருவாட்டி......
ஒரே ஒருவாட்டி
சொல்லிடுமாமா...
மனசதொறந்து......!
உசுரு போறவரை
உனக்காக காத்துட்டிருப்பேன்
வந்து என் மடிசாஞ்சு
நீ கண்மூட........!

