தமிழ் இலக்கிய உலகின் முதல் அதிசயம்+++++அகன்++++
தோழமை நெஞ்சங்களே
வணக்கமும் வாழ்த்துகளும்....
சிறப்புக் கவிதைகள் எனும் பகுதி ஒன்று தளத்தில் உள்ளது என்பதை அறிவீர்கள்....
50 சிறந்தக் கவிதைகள் தெரிவு செய்யப்பட்டு அவை தனித்தையே விமர்சன வரிகள் பெற்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படும்
"பன்னாட்டுப் படைப்பாளிகளின் தொகுப்பு-இருமொழிகளில் விமர்சன வகைமையோடு "என விரைவில் வெளியிடப்பட உள்ளது எனும் மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்...
தோழர் ஜோசப் ஜூலியஸ் மற்றும் தோழர் பிரேம பிரபா ஆகியோர் மொழிபெயர்ப்பு செய்ய தொடங்கி உள்ளனர்.
தோழர்கள் அபி ,கவிஜி ,புலமி ,ஈஸ்வரன் ராஜாமணி .....போன்றோர் விமர்சனம் செய்கின்றனர்......
தமிழகத்தின் ஆகச்சிறந்த கவிஞர்கள் தங்கள் வாழ்த்துகளையும் ஆய்வுரைகளையும் அளிக்கின்றனர்........
இந்த புதிய முதல் முயற்சிக்கு தங்களின் அன்பும் ஆதரவும் வேண்டுகிறேன்...
சிறப்புக் கவிதைகளின் தெரிவாக உங்கள் கண்ணோட்டத்தில் வரும் எவற்றையும் நான் அறிய செய்யுங்கள்...
எதிர்பார்ப்புகளோடு அகன்