தங்கமான

படித்ததில் விலை கூடியது:

நியூயார்க்-ல் தங்க முலாம் பூசப்பட்ட ஸ்கேட்டிங் போர்ட்:

தங்க முலாம் பூசப்பட்ட சறுக்குப் பலகையொன்றை (ஸ்கேட்போர்ட்) மத்யூ விலட் எனும் கலைஞர் வடிவமைத்துள்ளார். தூய தங்கத்தால் இந்த சறுக்குப் பலகை முலாமிடப்பட்டுள்ளது. நியூயார்க் நகரிலுள்ள கடையொன்றுக்காக இந்த சறுக்குப் பலகையை மத்தியூ விலட் தயாரித்துள்ளார். இதன் விலை 15000 டொலர்கள் (சுமார் 20 லட்சம் ரூபா) ஆகம். உலகின் மிக அதிக விலையுள்ள சறுக்குப் பலகை இதுவாகும்.

தூய தங்கத்தால் முலாமிடப்பட்டுள்ளதால் சாதாரண சறுக்குப் பலகையைவிட இது 80 சதவீத அதிக பாரமானதாக காணப்படுகிறது. தங்க முலாமிடப்பட்டுள்ள போதிலும் இந்த சறுக்குப் பலகையின் அனைத்து பாகங்களும் முற்றிலும் இயங்கக்கூடியதாக உள்ளது என மத்தியூ விலட் கூறுகிறார்.

நான் எனது வாழ்க்கை முழுவதும் ஸ்கேட்போர்ட்டை பயன்படுத்தியுள்ளேன். அதனால் இவ்வாறானதொரு பொருளை தயாரிப்பது சிரமமாக இருக்கவில்லை எனினும் இத்திட்டத்தை நாம் இரகசியமாக வைத்திருந்தோம்தற்போது இதற்கு அதிக வரவேற்பு கிடைத்தள்ளது.’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எழுதியவர் : சாந்தி (27-Apr-14, 10:29 pm)
சேர்த்தது : shanthi-raji
பார்வை : 57

சிறந்த கட்டுரைகள்

மேலே