இளமை இது இளமை

பேருந்து நெரிசலில்
கூட்ட உரசலில்
செல்வது பிடிக்கும்..

நெரிசலோ இல்லையோ
படிகளில் நின்று
ஆடிசெல்ல பிடிக்கும்..

குழுவாய் இருக்கையில்
எதிர்பாலிணத்தாரை வம்பிழுத்து
அரட்டை செய்ய பிடிக்கும்..

தலுக்காய் மிலுக்காய் நடந்து
இவளை மீண்டும் கொஞ்சம்பாரென்று
திரும்பிப்பார்க்க வைக்கபிடிக்கும்..

திமிராய் துடியாய் நடந்துகொண்டு
இவன் இராங்கிக்காரனென்று
ஊரில் எவரும் பேசுவதுபிடிக்கும்..

கொஞ்சம் கொஞ்சம் அழகுகாட்டி
கொஞ்சம் கொஞ்சம் எடுப்புகாட்டி
எல்லோரையும் கவர்ந்திட பிடிக்கும்..

சிலசில பொய்கள் சொல்லி
சிலசில இடங்கள் சென்று
நண்பர்களோடு சுற்றுவது பிடிக்கும்..

எல்லோரும் செய்ய மறுக்கும்
ஏதாவது ஒன்றை அதிரடியாய்
செய்து முடித்து நிற்கப்பிடிக்கும்..

ஏனெனில் நாங்கள் இளசுகள்!
எதுவும் நடத்தும் எங்கள் கைகள்!
எதையும் வெல்லும் எங்கள் மனங்கள்!

இளம் இறக்கை விரித்த சிறுசுகள்!
இன்ப வானில் திரியும் பறவைகள்!
இனிமை தேடும் புத்தம்புது தேனீக்கள்!

வளரிளம் பருவம் வம்புகள் செய்யும்
இறகு விரிக்கட்டும் சிறகு அடிக்கட்டும்
கவனம் கவனம் தற்காப்பில் கவனம்!

மலரத்துடிக்கும் மொட்டுகள் இவர்கள்
முனையைக் கிள்ளி வைக்காதீர்!
முன்பின் சொல்லி முதலடி அமைப்பீர்!

எழுதியவர் : சீர்காழி சபாபதி (27-Apr-14, 11:54 pm)
Tanglish : ilamai ithu ilamai
பார்வை : 440

மேலே