விபத்து
வேகம்
விவேகமல்ல ..
வாழ்க்கை
விளையாட்டு மைதனமல்ல
சில வினாடிகளில் .....
இமை மூடி திறப்பதற்குள்
செயலற்று
ஸ்தம்பிக்கும் நிலை ...
விதிமுறைகளை
விளையாட்டாய்
விலக்கும் போது
நிரந்தரமான
காயங்கள் =======
நினைவில் நிற்கும் வலிகள் ======
நிதர்சனத்தை உணர்த்தும் வலிகள் ======
அலை பேசி தவிர்த்து
மது மறந்து
வாகன பரிசோதனை செய்து
விதிமுறைகளை மதித்து
வாகனத்தை
அகத்திலும்
புறத்திலும்
விபத்து இல்லாமல் இயக்கி
வாழ்க்கை எனும்
இறைவனின் பொன்னான
பரிசை பாதுகாப்போம்