+++===பிறந்தநாள் வாழ்த்துக்கள்+++===
என்றும் இளமையோடு
எண்ணற்றத் தொண்டுசெய்து
ஏணியாய் வீற்றிருக்கும்
எம்தலைவா வாழ்கவே நீ..
விண்ணும் விரிகடலும்
விலங்கில்லா வளிபோலும்
நின்புகழ் நிலைத்திருக்கும்
நிலமதில் முளைத்திருக்கும்...
முப்பாலூட்டியவன்
உமக்கு தந்தையல்லோ..
அவனையும் பெற்றெடுத்த
தமிழ்த்தாய் பெயரனுக்கு
வாழ்க வாழ்கவெனவே
வாழ்த்துக்கள் கூறுகிறேன்...!!!
வாழ்த்துக்களுடன்
நிலாசூரியன்.