முதல் காதல்
மணித்துளிகள் மறைகின்றன,தவிப்புகள் தொடர்கின்றன
பெண்ணே உன்னருகில் மௌனமாய் இருக்கையில்..!
இந்த உணர்வுகள் நீளவேண்டும்,என்னக்குள் நான் தொலையவேண்டும்
பெண்ணே நீ எனக்குள் என்னை கண்டறியவேண்டும்..!
போதை இல்லாத மயக்கமாக மாறியதோ,உன்னது வார்த்தைகள்!
மயக்கத்திற்கு மெழுகேற்ற பிரிந்ததோ,உன்னது இமைகள்!
இந்த ஒரு புதுவிதமான அதிசயம்
என்னக்குள் நீங்காத ரகசியம்!
தள்ளாடும் இந்த ஜீவனை அள்ளி அனைப்பாய?
தொட்ட இடமெல்லாம் முத்த மலை பொழிவாய?
இந்த மயக்கத்திற்கு மருந்தொன்று கொடுப்பாய? - பெண்ணே!
மருந்தாக உன்காதலை மனதில் பருக காத்திருக்கிறேன்!
கானலாய் உன்மீது கொண்ட காதலை எதிர்பாத்து!
---புதுக்கவிஞர் ---
(விக்னேஷ் பார்வதீசன்)

