உண்டா ரெனப்படுவர் யாவர் - ஆசாரக் கோவை 18
நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய்
துண்டாரே யுண்டா ரெனப்படுவர் அல்லாதார்
உண்டார்போல் வாய்பூசிச் செல்வ ரதுவெறுத்துக்
கொண்டா ரரக்கர் குறித்து. 18 ஆசாரக் கோவை
பொருளுரை:
குளித்து, கால்களைக் கழுவி, வாயைத் துடைத்து, உணவு பரிமாறப்பட்ட இலை, தட்டைச் சுற்றி நீரிறைத்து, உணவளித்த இறைவனுக்கு நன்றி சொல்லி உண்பவர், உண்டதாகக் கருதப்படுவர்.
இப்படிச் செய்யாமல் உண்டவர் உண்டாரைப் போல வாயைக் கழுவிச் செல்பவர் உண்பதை அரக்கர் சினந்து எடுத்துக்கொள்வதாகக் கருதப்படுவர்.