திருமணம்
எதிர்பார்த்த நாள் வந்தது
திருமண மண்டபம் சூழ உறவினர்கள்,
மங்கள வாத்தியங்கள் காதில் பாய ,
சிறார்கள் விளையாட்டு மகிழ்ச்சியில் திளைக்க ,
பெரியவர்கள் உறவு சந்திப்பில் கரைந்து போக,
என் மனதில் இருந்த கற்பனை மணமகனாய் நீ மணமகன் அறையில் இருந்து வெளி வர ,
மங்கள் சடங்குகள் இருவர்க்கும் செய்ய ,
வேளை வந்தது,
கெட்டிமேளம் கொட்டும் வேலை வந்தது,
என் கண்கள் பாக்க,நீ மங்கள நாணை பூட்டுகிறாய் உன்னவளின் கழுத்தில்
இங்கு நானோ அந்த காட்சியைகண்டு , உயிர் பிரிந்து செல்லும் நூல் இழையில்…..