பொங்கட்டும் நன்மைகள்

இலக்கியம் பேசி ஆட்சி
=இடத்தினைப் பிடித்த பேர்கள்
கலக்கலை ஊத்தி ஆட்சிக்
=கடைகளில் கொடுத்து வைத்தார்!

காதலெனும் ஏரியிலே
கனவுகளால் தோணிவிட்டுக்
கண்ணீரைத் துடுப்பாக்கிக்
கரைதேடும் உள்ளங்கள்!

நம்பிக்கை தொலைந்துவிட,
நள்ளிரவாய்ப் பகலாகும்!
வெம்புகின்ற மனம்போல
வீதியெலாம் மேடுபள்ளம்!

சலனங்கள் குடைபிடிக்கச்
சஞ்சலங்கள் உள்ளொழுகும்!
வண்ணப் பொடிதூவி
வண்ணவண்ண நீர்பீச்சி
எண்ணம் உடலோடும்
இனியேனும் தூய்மையுற
மண்ணில் சிறப்பான
மகிழ்ச்சியுறு மாற்றத்தை
கொண்டு வருவதற்கே
குறிப்பாரோ தேர்தல்.நாள்!

பொசுங்கட்டும் தீமைகள்
பொங்கட்டும் நன்மைகள்!
==++==

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (30-Apr-14, 8:52 pm)
பார்வை : 95

மேலே