மே தினமே- தனராஜ்

மே தினமாம் மே தினம்
ஏழைகட்கு மேதினியில்
எல்லா நாளும் மே தினமே !

உழைப்பவன் தான் உலகத்திலே
ஏழை என்ற நிலை மாறும்
நாள் என்று வரும் கூறு . ............ ( மே தினமாம் )

உழைப்பாளி
இல்லையென்றால்
உலகம் சுழலப் போவதில்லை

உழைப்பும் வளர்ச்சியும்...
உடலும் உயிருமாம் ;
இதை உணர்ந்தால் ... .... .............( மே தினமாம் )

மழை மறந்து போனாலும்
வியர்வை சிந்தி விளைய வைக்கும்
விவசாயத் தோழர்கட்க்கு ... .....( மே தினமாம் )

அம்மணத்தை மறைப்பதற்கு
ஆடை நெய்யும் மா மனிதன்
தறித் தொழிலாளிக்கு ... ..............( மே தினமாம் )

பள்ளிக்கூடம் அழைத்து வந்து
பல் கலையும் கற்றுத் தந்து
வல்லவராய் வடிவமைக்கும்

நல்லாசிரியர்கள்
நம் நாட்டின் சொத்து ....
அவர்களே அறிவின் வித்து ! ........( மே தினமாம் )

அனுதினமும் போர்க் களமாய்
ஆணைக்குக் கட்டுப் பட்டு
சேனையைப் போல சீருடை தரித்து

காக்கும் பணி அதை
கடமை எனச் செய்யும்
காவலர்கட்கு ....... ......................( மே தினமாம் )

வீட்டைப் பெருக்கிக்
குப்பையை
வீதியில் கொட்டிய போதும் ...

நாயைப் பிடித்து
நடுரோட்டில்
கழிக்க வைத்த போதும்

சேவை என்று அதை
செவ்வனே செய்யும்
துப்பரவு தொழிலாளிகட்கு .....

மே தினமாம் மே தினம்
ஏழைகட்கு மேதினியில்
எல்லா நாளும் மே தினமே !

எழுதியவர் : படைக்கவி பாகருதன் (30-Apr-14, 9:16 pm)
பார்வை : 2033

மேலே