வாழ்நிலை மாறாதோ
ஒரு புள்ளியில் ஆரம்பித்தவை
மறுபுள்ளியில் முடிகிறது
எதற்கு ஆரம்பித்தோம்
எதற்கு முடித்தோம்
இடைப்பட்ட நிலையிலே வாழ்க்கை
வெறுமை சூழ்ந்த மேகங்கள்
காட்சியுள்ளவரை தெரிகிறது
நிசப்பதமான தருணத்தில்
நீட்சிகள் மறைந்துபோகிறது
துடிக்கும் வரை இதயமும்
சுவாசம் வரை உயிரும்
உன்னை விட்டு விலக
நினைத்தது இல்லை
நினைப்பவை நடப்பதுமில்லை
என் வாழ்நிலை மாறாதோ
கண்ட கனவுகள் நிஜமாகாதோ...