தாழ்வுமனம்

என் அறைக் கண்ணாடியும்
என்னை வெறுக்குது
என் நிழல்கூட
என் பின்னே வரத் தயங்குது
என் விரல் கூட
என் வீட்டுக்கு வழி காட்ட
மறுக்குது
நான் நடந்தா
என் வீதியும்
நாதியற்றுப் போகுது
வெக்கையில் நான்
நெளிகையில்
தெற்கு காற்றும்
என்னை விட்டு
விலகி நடக்குது
மலர்ந்த மலர்கூட
நான் வர கூம்புது
ஊரோர ஆறும்
அலையின்றி
வத்துது
உதயனும் நிலவனும்
நான் வந்ததும்
ஓடி ஒளிவது
நாளும் நடக்குது.