எரிந்து போனது என் கண்கள்

நேரம் பார்த்து
முழுதும் முடித்து
தேடி தேடி
எடுத்து கொண்டு
வீட்டை விட்டு
விரைவாய் செல்ல

வழியை காட்டி
பாதம் செல்ல
மலரை பார்த்து
இதழ்கள் சிரிக்க

பேருத்தில் ஏறி
பயணம் செய்ய
பத்திரமாய் இறங்கி
பொறுப்புடன் செல்ல

அலுவல் அனைத்தும்
அன்புடன் முடித்து
வியர்வை துடைத்து
வீட்டை நினைத்து

விரைவாய் சென்று
கதவை திறக்க
அழுத தங்கையை
கொஞ்சி கொஞ்சி
குழந்தையாய் மாற

வெயிலுக்கு குளிர் தேட
குளிருக்கு அனல் தேட

நிலவை ரசிக்க
நீந்தி மகிழ

கதைகள் படிக்க
கவிகள் ரசிக்க
அவளை பார்த்து
காதல் சொல்ல

இன்னும் அதிகம்
சொல்ல சொல்ல
நீண்டு செல்லும்
இயற்கை ரசிக்க

ரசித்து மட்டும்
நான் வாழ
பழக்கி கொடுத்த
பாவி

கணினி பார்த்து
கதிரியக்கம் தாக்கி
பழுதடைந்தான்

இமைக்கு அடியில்
வாழ்ந்து
எரிந்து போனது
என் கண்கள்

எனக்கு
அறிமுகமானது
மூக்கு கண்ணாடி

இனி பார்வை கூட
செயற்கை தான் ....

என் பார்வை
அழித்ததும்
செயற்கை தான் ....


---- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (2-May-14, 4:45 pm)
பார்வை : 860

மேலே