சுவடுகள் தொலைந்த சுதந்திர பாதங்கள்

'' சுவடுகள் தொலைந்த சுதந்திர பாதங்கள் //

'' அகிம்சை என்னும் போராட்டத்தை
கொண்டுவந்தார் காந்தி - இன்னமும் ,
அடங்காமல் தான் போனது
மாக்களின் மன சாந்தி //

'' சட்டம் என்னும் சகாப்தத்தை
கொண்டுவதார் அம்பேத்கர் - அதில் ,
விட்டம் போட்டு சந்துப்பொந்துக்கலை
காண்கின்றனர் அங்கத்தினர் //

'' பட்டாளம் என்னும் பாரதத்தை
கொண்டுவதார் நேதாஜி - இன்னமும் ,
பதட்டத்துடனும் மனிதன் உள்ளான்
அதனை கண்டு வெருத்தாட்சி //

'' கல்லாமையை ஒழிக்க பள்ளிகளை
கொண்டுவந்தார் பயிலாத மேதை - ஆனால் இன்று ,
'கள்' உண்ட அமையாக
நடக்கிறான் ஒய்லாப்பாதையிலே //

'' முப்பால் என்னும் திருக்குறளை
கொண்டுவந்தார் திருவள்ளுவர் - இதனை ,
நடப்பாள் பலரும் பயிலாதப் போனதால்
வந்தது பெருங்கவலை //

'' இப்படிப்பட்ட ஜென்மங்களை வைத்துக்கொண்டு
வித்தகர்கள் வித்திட்ட சுவடுகளை ,
தொலைத்து விட்டு இப்பொழுது துலாவிக்கொண்டு
இருக்கிறது நமது சுதந்திர பாதங்கள் //


சுவடுகள் ---------சிவகவி ,,,,,,

எழுதியவர் : சிவகவி (3-May-14, 12:28 pm)
பார்வை : 196

மேலே