திருடினியா

வக்கீல் : ஏம்பா நேத்து அண்ணா நகர்ல இருக்க ஒரு வீட்ல திருடினியா ?
திருடன் : ஆமாங்கையா
வக்கீல் : அங்கிருந்து 10 லட்சம் எடுத்தியா?
திருடன் : இல்லைங்க ?
வக்கீல் : இல்லியா?
திருடன் : ஆமாங்க 10 லட்சம் எடுக்கல 5 தான் எடுத்தேன்.
வக்கீல் : என்னப்பா சொல்ற 10 லட்சம் எடுக்கவில்லையா
திருடன் : அங்க 10 லட்சம் இருந்துதுங்க ஆனா எவ்வளவு எடுத்தாலும் அதுல பாதிய இந்த ஏட்டு அய்யாவுக்கு கொடுக்கணும் அதனாலதான் 5 லட்சம் மட்டும் எடுத்தேன்.
வக்கீல் : ஏம்பா 10 லட்சம் எடுத்தா அதுல பாதி 5 லட்சம் அவருக்கு கொடுத்துட்டு மீதி 5 இலட்சத்த நீ வெச்சிருந்திருக்கலாமே இப்போ 5 லட்சத்துல பாதிய அவருக்கு கொடுத்தா உனக்கு நஷ்டந்தானே ?
திருடன் : இல்லியே நான் இந்த 5 இலட்சத்தில இருந்து பாதி அவருக்கு கொடுக்கவேண்டியது இல்லையே .
வக்கீல் : ஏம்பா அவரு வேணாம்னு சொல்லிட்டாரா.
திருடன் : அப்படியெல்லாம் ஒன்னும் இல்லீங்க
வக்கீல் : பின்ன வாங்குறத நிறுத்திட்டாரா
திருடன் : அட நீங்க வேற நான் தான் அவருக்கு கொடுக்கவேண்டிய 5 இலட்சத்த வீட்டிலையே வெச்சிட்டு வந்துட்டேனே
வக்கீல் : ஏம்பா அந்த வீட்ல இருக்குற 5 இலட்சத்த அவரு எப்படி எடுப்பாரு
திருடன் : என்னங்க நீங்க இதுகூட தெரியாம நேத்து அவரு வீட்ல இருந்து தானே 5 லட்சம் எடுத்தேன்..
வக்கீல் : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!