நினைவெல்லாம் நீ
கண்களில் மழைக்கட்டும் போதெல்லாம்
சுடர் விடும் ஒளிதனிலே
சொல்லெனும் மொழியெடுத்து
உயிர் பிழிந்து எழுதுகிறேன்
என் தோழி நீ தான் என்று!!!
சொல்லாதத் சிறு சிறு ஆசைகளும்
சொல்லியும் கிடைக்காத எதிர்பார்புகளும்
இன்னும் எத்தனை எத்தனையோ
பசுமை நிறைந்த நினைவுகளை
தேக்கி வைத்து சொல்கிறேன்
என் தோழி நீ தான் என்று!!!
அன்று என்னால் உன் கண்களில்
எத்தனை முறை உப்பு கரைந்ததோ
இன்று உன்னால் தினதினம்
என் கண்களில் இரத்தக் குமிழ்கள்
நீராவியாக வடிந்துக்கொண்டி௫ப்பதில் உணர்கிறேன்
என் தோழி நீ தான் என்று!!!
என்னில் அடங்கா நேசம் திக்குமுக்காட
பாசி படியாத பாசம் தத்திதடுமாற
ஏங்கியே நிற்கும் அன்பு
மறக்க முடியாதும் விடாமுடியாதுமாய்
நினைவுறுத்துகிறேன்
என் தோழி நீ தான் என்று!!!
காலங்கள் ஓடினாலும்
கால்கள் தடுமாறும் வயதிலும்
நிச்சியமாய் சொல்வேன்
என் தோழி நீ தான் என்று!!!
நினைவில் நின்றவளே
நித்தமும் யாசிக்கிறேன்
நிறைந்த அன்பும்
உன் நட்பும்!!!