பேரன் குறள்கள் -02 =

யோரன் குறள்படித்து யோசித்தது.

கல்லா விலங்கும் கடிக்காவே குட்டிகளைப்
பொல்லா மனிதர்க்(கு)ஏன் போர்?-----------------------11

படிப்பார் படிக்கட்டும் பாரில்,பே ரர்வாய்
முடிப்பில் ஒழுகும் மொழி!---------------------------------12

வையத் தகலமும் வானத் துயரமும்
பொய்யாக்கும் பேரன் சிரிப்பு!------------------------------13

போதும் உனக்குள்ள போகங்கள்; பேரர்க்கே
ஏதும் இனிய,விட்(டு) ஏகு!-----------------------------------14

பூக்கள் இருக்குமோ? பொன்வண்டு பாடுமோ?
ஏக்கமுன் பேரனுக்(கு) ஏன்?---------------------------------15

உண்டால் செரிப்ப(து) உணவு;உன் பேரனும்
கண்டால் விரும்பின் உலகு!-------------------------------16

வென்றால் மகிழ்ச்சி விளையட்டும்! பேரனும்
நின்றே செழிக்க நினை!--------------------------------------17

நெல்லும் தினையும் நிலைக்குமோ? பேரனும்
சொல்லக்கேட்(டு) என்ன சுவை?-------------------------18

பாட்டும் கவிதையும் பாடுவையோ? பேரன்முன்
நாட்டையும் ஆக்கி நரகு!-----------------------------------19

சிட்டுக் குருவிபோல் செல்லுமோ மைனாவும்?
பட்டுப்பே ரர்க்கென் பதில்?--------------------------------20
==============

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (5-May-14, 10:30 am)
பார்வை : 103

மேலே