கல்யாணம்

கல்யாணம்!
விரல்கள் தொட்டு விருப்பம் தெரிவிக்க
விருந்துடனான விண்ணப்பம்!
கல்யாணம்!
நகம் கடித்து நாணம் கொள்ள வெகுமானம் கோரும்
வியாபாரம்!
கல்யாணம்!
புன்னகை அழகை பொன் நகையால் பூரிக்கும்
ஆடம்பரம்!
கல்யாணம்!
மனங்கள் சங்கமிக்க மந்திரம் ஓதும்
மாய்மாலம்!
கல்யாணம்!
அறிமுகம் இல்லா ஆடவன் மனையில் அகம் போக கூடிப் பேசும்
குடகூலி!
கல்யாணம்!
கற்பை அழிக்க கற்பை அளிப்பவர் காசு கொடுக்கும்
கேவலம்!
கல்யாணம்!
ஏழைகளை ஏளனிக்கும் அந்தஸ்தர்களின் அடையாளம்
அளப்பரை!
கல்யாணம்!
கணவனாகி காதல் செய்ய கன்னியர் கொடுக்கும் கையூட்டு ஏற்பாடு!
காதல் செய்ய பழகுவோம் காசில்லா கல்யாணங்கள் மாசில்லா மணங்கள் செய்குவோம்!