பேரன் குறள்கள் = 01

யோரன் குறள்படித்து யோசித்தது:-

பேரன் முகம்பார்த்து யோரன் குறள்வடித்தார்
தீரன் தமிழன்பன்! தேன்!-----01

பேரன் சிரிப்பில் பெரும்பொருள் கண்டதமிழ்
வீரன் வழிச்செல்வோம் வா!-----02

தாத்தா தருமித் தமிழமுதை உண்பதனால் ,
ஆத்தா! இவனும் கவி!----03

குழந்தை மழலை குறளின்முன் னோடி!
விழுந்தசொல் எல்லாம் வியப்பு!-----04

கண்பார் மழலைக் கவிகேள் கடைவிரிக்கும்
வெண்பா முதலியன வே!-----05

குட்டிக் குடிமகனின் கொஞ்சும் மழலையின்
புட்டி மதுமேலோ? போ!-----06

பேரர் உலகத்தில் பெற்றீர் இடமென்றால்
போரும் வரப்போகு மோ?------07

வஞ்சி கலிகூட்டும் வாழ்க்கையில் பேரனைக்
கொஞ்சி மகிழா தவர்க்கு!-----08
[வஞ்சி=பகைவர் மேற்செல்லுதல்; கலி=துன்பம்]

படித்துமே மேன்மைப் படாஅர்க்குப் பேரன்
வடிக்கும் மழலையே மாற்று!-----09

பேரன் விழிபார்த்துப் பேசிப் பழகுவீர்!
ஏறும் உலகம் எதற்கு?-----10.

யோரன் குறள்படித்தே யோசித்தேன் இங்கிவற்றைப்
பேரன் படிப்போர்க்கென் பேறு?
=================== ======

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (5-May-14, 8:51 am)
பார்வை : 156

மேலே