பரபரப்பு

செயற்கைக்கோள்
செய்திகள்
வாசிப்பவரும்
வழங்குபவரும்
செம்மொழியிலையே
பரபரக்கிறார்கள்

செவிகள் வழிந்தன
விழிகள் விரைத்தன
கேட்டவரும்
பார்த்தவரும்
செய்வதறியாமல்
பரபரக்கிறார்கள்

நல்லவேளையோ
கெட்டவேளையோ
மின்தடை குறுக்கிட
மீண்டது பரபரப்பு
மாண்டது பரபரப்பு

எழுதியவர் : சர்நா (5-May-14, 1:23 pm)
பார்வை : 130

மேலே