மழை செய்த பிழை

விருந்து கொடுக்க வந்த உறவு அறுந்து போச்சு...
மருந்து சாப்பிட கூட மனசு மறந்து போச்சு...!!

திரண்டு வந்து நதியும் வறண்டு போச்சு...
அரண்டு போன என் இதயம் இருண்டு போச்சு...!!

எங்கூர்ல தண்ணி கிடைக்கிறதே கொஞ்சம்...
ஆனா எங்கண்ணீருக்கு மட்டும் எப்போதும் வந்ததில்ல பஞ்சம்...!!

ஒரு சோம்பு தண்ணீருக்கே தட்டுப்பாடு..
அடுத்த ஊருகிட்ட கேக்ககூடாதுனு எங்கூரு கட்டுப்பாடு...!!

தண்ணீருக்கு கஷ்டப்படுறது தான் எங்க விதி...
இது அந்த இறைவனோட சதி...!!

எந்தச்சாமி கண் திறக்கும்னு தெரியல...
இதுக்கு என்ன பரிகாரம் பண்றதுன்னு எங்களுக்கும் புரியல...!!

கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணமும் பண்ணியாச்சு...
கன்னிப்பெண்ணை நிர்வாணமா வரவும் சொல்லியாச்சு...!!

அனா மழை வந்த பாடில்ல...
எங்க பாடு எவரும் இதுவரை பட்டதில்ல...!!

எங்களுக்கு மட்டும் வருசமெல்லாம் சித்திரை...!
எங்க கண்களுக்கு இல்ல நித்திரை...!!
சாவதற்கு தேடுகிறோம் தூக்க மாத்திரை...!!!
அப்பொழுதான் முடியும் எங்கள் வாழ்க்கை யாத்திரை...!!!!

எழுதியவர் : அன்புசூரியா (5-May-14, 12:36 pm)
பார்வை : 90

மேலே