ஈழப்பிணம்
மனதின் உறுதி,
இயற்கை தந்த, சதையில் இல்லா காரணத்தால்,
இரும்பில் செய்த குண்டு துளைத்ததும்,
இறந்து விட்டேன் நான்...!!!
என் அம்மை அப்பனும்,
அண்ணன் தம்பியும்,
இதோ பிணங்களாய் இங்கே...
என் கணவர்
சிதரிக்கிடக்கிறார் அங்கே...
மண்ணில் கிடக்கும் பிணம் எந்தன்
மார்பைத் தீண்டும் தின்னிகளே,
உங்கள் அங்கம் அறுத்திட
ஆவி துடிக்குதே,
உயிர் போன போதும்
என் ரத்தம் கொதிக்குதே...
வீழ்ந்த உடலே........
எழுந்திரு ஒரு முறை நீ...
செவிடாய் போன இறைவனே,
இதற்காவது உதவிடு நீ....!!!
பிணத்தின் உடலை
ரசித்துச் சிரிக்கும் மிருகமே,
உன் அப்பன் பெயர் என்ன பேயா...??
இல்லையவன் சிங்கள வெறி கொண்ட நாயா....??
அங்கே கதறும் எந்தன் பிஞ்சுப் பிள்ளை
ஆயுதம் எடுப்பான் ஒரு நாள்,
அவன் உன் தேகம் கிழிப்பான்,
இரத்தம் எனும் சேறை எடுப்பான்,
எங்கள் மண்ணை நனைத்து
எம்மக்கள் கண்ணீர் துடைப்பான்..!!
அது வரை..... நீ.....
சிரி.....!!!!