சிக்கன சிறுநகையின் அரங்கேற்றம்
![](https://eluthu.com/images/loading.gif)
உயிருள்ள பொம்மை ஒன்றின்
உற்சாக நடனத்தைக் காண்க !
அலங்காரம் செய்த சிறுமலரின்
ஆட்டத்தை இங்கே ரசித்திடுக !
வானவில் வண்ணமோ ஆடை
வசமிழுக்கும் கூரான பார்வை !
நிற்கும் தோரணையோ கற்சிலை
ஈர்க்கும் எவரையும் பொற்சிலை !
சிகையை அழகூட்டும் சிங்காரம்
சிக்கன சிறுநகையின் அரங்கேற்றம் !
நவரசம் பொங்கிடும் தோற்றமிது
நாகரீக வளர்ச்சியின் மாற்றமிது !
பழனி குமார்