கால்டுவெல் - 200வது பிறந்த நாள்

ராபர்ட் கால்டுவெல் (07-05-1814 – 28-08-1981)

சீரிளமை குன்றாத நம் செந்தமிழ் ஒரு செம்மொழி என்பதை உலகிற்கு முதன் முதலில் எடுத்தியம்பிய மொழியியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் ஆவர். இன்று அவரது 200வது பிறந்த நாள்.
ராபர்ட் கால்டுவெல் இங்கிலாந்தைச் சேர்ந்த மதபோதகர் மற்றும் மொழியியல் அறிஞர். திராவிட மொழிக் குடும்பம் என்பதை அழுத்தமாக உலகிற்கு எடுத்துக் காட்டியவர். அவர் 1877 ஆன் ஆண்டு திருநெல்வேலியில் உதவிப் பேராயராகப் பணியாற்றி வந்தார். அவரைப் பற்றி “தி இந்து” நாளிதழ் “அழுத்தப் பட்டவர்களின் சேம்பியன்” என்றும் ”புதுமையான சமூக சீர்திருத்தவாதி” என்றும் குறிப்பிடுகிறது. தமிழக அரசு அவருக்கு ஒரு நினைவுச் சின்னத்தை நிறுவியுள்ளது. மைய அரசு அவர் சேவையைச் சிறப்பிக்கும் வண்ணம் தபால் தலையை வெளியிட்டது சென்னை மெரினா கடற்கரையில் 1967 ஆம் ஆண்டு தென்னிந்தியத் திருச்சபை வழங்கிய கால்வெல்லின் சிலை நிறுவப்பட்டது.

கால்டுவெல் அயர்லாந்தில் உள்ள ஆண்ட்ரிம் பகுத்யில் கிளாடி என்ற ஊரில் பிறந்தார் 1814 ஆம் ஆண்டும் மே மாதம் 7 ஆம் தேதி பிறந்தார். அவர் குடும்பம் கிளாஸ்கோ நகருக்கு குடி பெயர்ந்தது. அவர் தனது 9 வயதிலேயே வேலைக்குச் சென்று பொருளீட்டும் நிலை ஏற்பட்டது. கல்வி நிலையம் செல்லாமல் அவராகவே கல்வி கற்றுக் கொண்டார். தனது 15 ஆம் வயதில் அய்ர்லாந்துக்குத் திரும்பி வந்து தனது அண்ணனுடன் டப்ளின் நகரில் தங்கிக் கொண்டு 1829-33 ஆம் ஆண்டுகளில் கலைப் பிரிவு பாடத்தைப் பயின்றார். அதன்பின் தனது மத நம்பிக்கையில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக கிளாஸ்கோ நகருக்கே திரும்பி வந்து கான்கிரிகேஷனல் சர்ச் என்ற அமைப்பில் சேர்ந்து தொண்டாற்றினார்.
கால்வெல்லுக்கு ஆக்ஸ்ஃபோர்டு பலகலைக் க்ழகத்தைச் சேர்ந்த் பேலியில் கல்லூரியில் பயில உதவித் தொகை கிடைத்தது. அவர் அயர்லாந்தைச் சேர்ந்தவர் என்பதால் கொடுக்கப்பட்ட வாய்ப்பு மறுக்கப்பட்டது. எனவே வர் லண்டன் மிஷனரி சொசைட்டி என்ற மத அமைப்பில் சேர்ந்தார். அந்த அமைப்பு அவரைப் பயிற்சிக்காக கிளாஸ்கோ பலகலைக் க்ழகத்திற்கு அனுப்பி வைத்தது. அங்கு கால்டுவெல் டேனியல் கெயட் ஸ்டேன்ஃபோர்டு என்ற கிரேக்க மொழிப் பேராசிரியரின் தாக்கத்திற்கு உள்ளானார். அவர் ஆங்கிலிகனிசம் என்ற புதுமையான ஆய்வுப் பூர்வமான கோட்பாட்டைப் போதித்தார். அது கால்டுவெல்லை ஊக்கப்படுத்தி மொழியலிலும், மதங்கள் பற்றி பாடத்திலும் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வழிவகுத்தது.கால்டுவெல் மிகச் சிறந்த மாணவர் என்ற சிறப்போடு ப்லகலைக் கழகப் படிப்பை முடித்து விட்டு கிறித்துவ மதத்தின் ஒரு பிரிவில் துறவியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கால்டுவெல் 1838 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் நாள் தனது 24வது வயதில் லண்டன் மிஷனரி சொசைட்டியின் மத பிரச்சாராக சென்னை வந்தார். பின்னர் விவலியத்தைப் பரப்பும் ஒரு அமைப்பில் சேர்ந்தார்.
அவர் 1877 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பேராயராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். தன் பணியைச் சிறப்பாகச் செய்ய தமிழ்ப் புலமை தேவை என்பதை உணர்ந்து தமிழ் மொழியை முறைப்படி சிறப்பாகக் கற்றுக் கொள்ள முழுவீச்சில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1844 ஆம் அண்டு எலிஜா மால்ட் (1822-99) என்ற பெண்ணை மணந்தார். கால்டுவெல் தம்பதியனருக்கு மொத்தம் 7 குழந்தைகள். அவரது மனைவியார் திருவாங்கூர் சமஸ்தானத்தில் லண்டன் மிஷனரி சொசைட்டியின் மதபோதகராக இருந்த சார்லஸ் மால்ட் என்பவரின் கடைசி மகளாவார். எலிஜா 40 ஆண்டுகளுக்கு மேலாக திருநெல்வேல்யில் வாழ்ந்து கொண்டிருந்த விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட தமிழ்ப் பெண்களின் மேம்பாட்டிற்காக அரும்பாடு பட்டார்.

திராவிட மொழிகள்
தென்னிந்தியாவில் பேசப்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம். துளு,, ஆஃப்கானிஸ்தானில் பேசப்படும் ப்ரகுல் போன்ற மொழிகளின் தனித்தனமையைப் வட இந்திய மொழிகளிலிருந்து பிரித்துக் காட்ட திராவிடியன் என்ற சொல்லைக் கால்டுவெல் தான் முதன் முதலில் கையாண்டார். ஆஃப்கனிஸ்தானில் பேசப்படும் ப்ரகுல் என்ற மொழியும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாகவே கருதப்படுகிறது. அது போன்ற வேறு சில மொழிகளும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று கண்டறியப் பட்டுள்ளது. கால்டுவெல்லுக்கு முன்பு வாழ்ந்த மொழியியல் அறிஞர்கள் பலரும் தமிழை சமஸ்கிருத மொழி அங்கம் வகிக்கும் இந்திய ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்றே கூறி வந்தனர். ஆனால் தென்னிந்திய நாட்டுப்புற பாடல்கள் என்ற புத்தகத்தை எழிதிய சார்லஸ் கோவர் என்பரைத் தவிர பெரும்பாலான மொழியியல் அறிஞர்கள் கால்வெல்லின் கூற்றை ஏற்றுக் கொள்கிறார்கள்.

தொலபொருள் ஆராய்ச்சி

திருநெல்வேலியில் பேராயராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது எட்வர்ட் சார்ஜெண்ட் என்பவரின் துணையோடு திருநெல்வேலி பற்றி பல ஆய்வுகளை நடட்தினார். தனது ஆய்வுத் தேடுதலிலொ ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டிருந்தவை மற்றும் சங்க இலக்கியம் பற்றியெல்லாம் ஆழ்ந்து படித்தார். அவரது ஆய்வின் பயனாக மண்ணில் புதைந்திருந்த பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது. பண்டைக் கால கட்டிடக்கலை, முதியோர் தாழி, நாணயங்கள், பாண்டிய மன்னர்களின் மீன் சின்னம் போன்றவை அவற்றில் அடங்கும். இந்த ஆய்வின் விளைவாக 1881 ஆன் ஆண்டு திருநெல்வேல்யின் அரசியல் மற்றும் பொது வரலாறு என்ற நூலை சென்னை மாநில அரசு வெளியிட்டது.
• கால்டுவெல் சுமார் 15 புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றில் மிகச் சிறந்த புத்தகமாகப் போற்றப்படுவது திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் தான். (A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages. Harrison: London, 1856.)

.
நன்றி: விக்கிபீடியா

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (5-May-14, 3:51 pm)
பார்வை : 177

மேலே