மாசு

வான் முகத்தில் மண்வடு
கரிபூசிடும் மானுடமே
பூசியகரியில் தெரிவதுண் முகமே
மரித்திடும் உன்குலமே...!!

விஞ்ஞான வளர்ச்சி கண்டு
விரைந்து சென்றிட
விசும்பும் வாகன புகையே
விரைவாய் வாழ்க்கை முடித்திடுமே !!

யாசகம் தந்த இயற்கையை
துவாம்சம் செய்யும் மானிடா
வேகம் வேகமென்று
சோகம் நோக்கி போவதேன்?!!

சுவாசம் சுத்தம் இல்லாது
வாசம் வீசிட மறுத்திடுமே!
மாசை நீயும் சுவாசித்து
மண்ணில் புதைய அவசரமோ?!!

ஓசோன் உனக்காக
உடைத்தவன் நீதானே
படைத்தவன் நகைக்கின்றான்
குழியை நீயே பறிப்பதெண்ணி !!

எழுதியவர் : கனகரத்தினம் (5-May-14, 8:06 pm)
Tanglish : masu
பார்வை : 371

மேலே