சுவன தாரகை சுவாதி

மானிடா !
தீவிரமாக வாதம் செய்வதில்
மட்டும்
நீ
காட்டும் அக்கறையை
தீவிர வாதம்
ஒழிந்து போகக்
காட்டியிருந்தால்
சுவாதிக்கு
அஞ்சலி ஒன்று எதற்கு ?
அகாலம் ஆன
அவளுக்கும் - எமக்கும்
இடையில்
அகலமாகியது
மனிதம் .
இனி எத்தனை முறை
அகழ்ந்தாலும்
அப்படி ஒரு
சுவாதியை
சிற்பமாக
செதுக்கித் தானே
மனிதன்
இரசிப்பான்...
உயிரில்லாத
பொம்மைகளை அலங்கரித்து
இரசிப்பதில்
மனிதனுக்கு அலாதியான அக்கறை .
என்றாலும்
நீ
ஒளிமயமான
உலகில் வாழ்வாயம்மா !!!
சுவன தாரகையாய் !!!!