முத்துக்களும் சிப்பிகளும்

சிப்பிகள் சிதறிக் கிடக்கின்றன
வெள்ளை மணல் வெளியில்
முத்துக்கள் அழகிய கழுத்தணியாக
மங்கையின் மார்பினில் !

வயிற்றில் சுமந்த முத்துக்களை
மார்பினில் தோளில் சீராட்டிய
முத்துச் சிப்பிகள் முதியோர் இல்லத்தின்
வெம்மை நிழலினில்
முத்துக்களோ அக்கரைச்சீமையில்
அழகிய கனவு இல்லங்களில் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (7-May-14, 9:24 am)
பார்வை : 160

மேலே