பேரன் குறள்கள் -07=
யோரன் குறள்படித்து யோசித்தது:=குறள் யாப்பு=
நிலவின் குழந்தைகள் நீலவான் விண்மீன்
பலவுமே, பள்ளிவிட்ட தோ?------------------------------61
கண்ணைத் திறந்தால் ஒளி;உனது வாய்,தமிழின்
பண்ணைத் திறக்கும் கதவு!-------------------------------62
தாத்தா நரம்புகளின் தள்ளாமை நீக்கிவிடும்,
பூத்தே வரும்சிரிப் பு!-----------------------------------------63
முதுமைத் தளர்,இருட்டின் முன்,ஒளி, பேரா!
புதுமை விழிகொண்டு பாய்ச்சு!--------------------------64
சாதி, மதபேதம், சாற்றும் மொழிபேதம்,
ஏதும் குழந்தைக்(கு).-----------------------------------------65
வேதம், குரான்,கீதை வேறு தனிப்போதை
ஏதும் குழந்தைக்(கு) இலை!------------------------------66
மழையும் வெயிலும், மலரும் நிலவும்,
குழைத்த பொருள்,குழந் தை! --------------------------67
காலம் மனிதன் கரைசேரச் செய்தனுப்பும்
பாலம் குழந்தையிது பார்!---------------------------------68
காய்ச்சீர்கள் நின்று கனிகின்ற வேளை,வரும்
மாச்சீர் குழந்தயா மா?--------------------------------------69
தாய்சீர் கொடுக்கத் தமர்சீர் எடுக்க,வரும்
பூச்சீர்கள் பேரர்,எனப் பேசு!-------------------------------70
======= ==========