நம்பிக்கை
இன்று புதிதாய்ப் பிறந்தோம்!
பிரசவித்த குழந்தையாய் இந்நாள்!
அழகாய் கையில் ஏந்து!
ஆசையாய் அகத்தில் ஏற்று!
புன்னகையை இதழில் வாங்கு!
குழந்தைத்தனத்தை மனதில் தாங்கு!
மழலைப்பார்வையாய் கருணை தாங்கு!
பிஞ்சுபாதமாய் எதிரிகளை தாக்கு!
தத்தும்நடையாய் முயன்று பழகு!
ஆராய்ச்சியாய் அனைத்தும் அணுகு!
ஆம், இன்று புதிதாய்ப் பிறந்தோம்!
மலராய் மலர்வோம்!
மழலையாய் வாழ்வோம்!
மனிதனாய் மாண்புறுவோம்!