அடமானம்
![](https://eluthu.com/images/loading.gif)
அப்போதெல்லாம்
பொன்னகைகளை வைத்தோம்
புன்னகையை தொலைத்து விட்டு.
பாத்திரங்களை வைத்தோம்
பத்திரங்களை இழந்துவிட்டு.
நிலப் பத்திரங்களையும் வைத்தோம்
நாம் வாழும் கோவில்களை
மூளியாக்கிவிட்டு.
எதையுமே திருப்பவில்லை
மூழ்க விட்டோம்.
இப்போதோ
வாக்குகளை வைக்கிறோம்
ஜனநாயகம் எனப் பேரிட்டு.
வார்த்தைகளை வைக்கிறோம்
துரோகங்களை சமைத்துவிட்டு.
மானத்தையும் வைக்கிறோம்
அடமானம்
மனசாட்சியை விற்றுவிட்டு
எல்லாமே மூழ்கவிட்டு !