இறைவன் கனவு பொய்த்து போனது

இறைவன் உலகை கண்டு மகிழ
உயிரினங்களை படைத்தான்...
அவனை உவமை கொண்டு வாழ
மனிதர்களை படைத்தான்...
கடவுள் கண்டகனவு குரங்குகையில்
பூ மாலை ஆனதே....
சமத்துவம் என்றசொல்லும் சரித்திரத்தில்
கறைபற்றி மறையுதே....
===''என் மனம் வருந்த கண்டு
என் பேனா மைநீர் வடிக்கிதின்று
காகித மேடையிலே கடவுளிடம்
கவிமனு கொடுத்துபடி''===
உயிர் கொடுக்கும் செங்குருதி
மனிதன்உடலில் சுரக்க
நிறம் கொண்டு யாவரும்
நிகர்யென இறைவன் படைத்தானே...
இன்று பணம் கண்ட கள்ளமனதில்
மனம் கெடுக்கும் கருப்புஇரத்தம்
இனம் பிரித்து இச்சைகொண்டு
தினம் ஓடுதே...
===''இதைபார்த்த என்மனதும் வருந்தகண்டு
என் பேனா மைநீர் வடிக்கிதின்று
காகித மேடையிலே கடவுளிடம்
கவிமனு கொடுத்துபடி''===
வெயில் நாளில் குளிர்காற்று
குளிர் நாளில் அனல்காற்று
என்றே திருடர் கூட்டம்
குதூகலமாய் தினம் வாழ...
சுட்டெரிக்கும் வெயில் கொண்டு
குடிசை இங்கு தீ பற்றி எரிவதுண்டு
கொட்டி திர்க்கும் மழைவந்து
குடிசைவீட்டை குளமாக்கி போவதுண்டு...
===''இதைபார்த்த என்மனது வருந்தகண்டு
என் பேனா மைநீர் வடிக்கிதின்று
காகித மேடையிலே கடவுளிடம்
கவிமனு கொடுத்தபடி''===
கயவர் மந்தை ருசித்து உண்ண
அறுசுவை உணவிருக்கு
அவர்கள் ஆடம்பர ஆடைகளில்
கோடி ரூபாய் கொட்டிகிடக்கு....
ஏழை மக்கள் பசிக்கு உண்ண
பழங்கஞ்சி இன்றி தவிப்பதுண்டு
மானம் மறைக்க உடுத்தும் உடை
கந்தலாகியும் கைநழுவாதிருபதுண்டு...
===''இதைபார்த்த என்மனது வருந்தகண்டு
என் பேனா மைநீர் வடிக்கிதின்று
காகித மேடையிலே கடவுளிடம்
கவிமனு கொடுத்தபடி''===
தெருக்குழாய் நீரோ ரோட்டினிலே
ஆறாக உடைந்து போக ஊழல்நரிகள்
சுத்தமான சுவைநீர் அருந்திதினம்
மகிழ்வாய் வாழ்ந்திருக்க...
வறண்ட நாவு நனைப்பதற்கும்
எம்மக்கள் வீதியிலே காத்திருப்பர்
நாள்பகலாய் காசுகொடுத்து
குடத்தினிலே குடிநீர் பிடிப்பதற்கு...
===''இதைபார்த்த என்மனது வருந்தகண்டு
என் பேனா மைநீர் வடிக்கிதின்று
காகித மேடையிலே கடவுளிடம்
கவிமனு கொடுத்தபடி''===
சுரண்டல் பேய்கள் சுகமாய் தூங்க
தடையில்லா மின்சாரம் வீட்டினிலே
அலட்சியநாய்கள் அசந்துறங்க விடிந்தபின்னும்
வீணாய்எரிகிறது வீதியெல்லாம் தெருவிளக்கு...
ஏழை மக்கள் இருள்சூழ வாசிக்கும்போது
கோடிகளை கறுப்பாக்கும் கொள்ளைகூட்டம்
விலைவாசி உயர்வென்ற சதிகொண்டு
ஏழைகளை தினம் வதைகின்றனரே...
===''இதைபார்த்த என்மனது வருந்தகண்டு
என் பேனா மைநீர் வடிக்கிதின்று
காகித மேடையிலே கடவுளிடம்
கவிமனு கொடுத்தபடி''===
நரகத்தில் போகவேண்டிய பாவிகள்உயிர்
பாடைவரை போனாலும் பலகோடி கொடுத்து
பாதியிலேயே மீட்டுவர உலகளவில்
கள்ளபணம் இருக்கும் போது...
நல்லஉயிர் நாதியற்று போகும்போது
நடுத்தெருவில் நிற்கும் உறவு இழப்பறியாது
வாழ்ந்திருக்க இயன்றபணம் கொடுத்திடாது
விலைமதிக்கா உயிருக்கு அற்பகாசு விலைகூறும்
இரக்கமில்லா ராட்சதர்கள் இன்னுமிங்கு வாழ்வதுண்டு...
===''இதைபார்த்த என்மனது வருந்தகண்டு
என் பேனா மைநீர் வடிக்கிதின்று
காகித மேடையிலே கடவுளிடம்
கவிமனு கொடுத்தபடி''===
.....கவிபாரதி.....