மழை
விண்ணவன் கவர்ந்து சென்ற
மண்ணுலக மங்கை
ஏக்கம் நிறைந்த
இரு விழி கரைந்து
தாய் வீடு காணும்
புது மணப் பெண் போல்
மூலை முடுக்கெலாம்
ஓடி நடந்து
சிற்றாடை கட்டி
சிறுநடை புரிந்த
சந்து பொந்தெலாம்
சாடித் திரிந்து
சல சலவென
ஓயாது மொழிந்து
அன்னை மடி புரண்டு
ஆனந்தம் கொள்கிறாள் !