உலையும் உளைச்சலும்

""" உலையும்... உளைச்சலும்"""
என் மன உலையில் கொதிக்க ஆரம்பித்துவிட்டது...
நிராகரிப்பு, புறக்கணிப்பு, அவமதிப்பு, வெறுப்பு,
என்ற வெறும் உப்புகளையும்,
கொஞ்சம் துரோகங்களையும்,
நிறைய துக்கங்களையும் ஒருசேரக் கலந்து,
என் கண்ணீர்த்துளிகள் நிரம்பிய
மன உலையில் கொதிக்க ஆரம்பித்தன...
நீ ஏற்றி வைத்த கோபத்தீ என்னமாய்
கொழுந்து விட்டு எரிகின்றது..
மரண அவஸ்தையில் துடிதுடிக்கின்றது
மௌனமாய் நீ தூக்கி எறிந்துச் சென்ற
பாழும் மனசு அனலில் விழுந்த புழுவென....
ஆழமாய் இருப்பதெல்லாம் கடலுமல்ல...
நீலமாய் இருப்பதெல்லாம் வானமுமல்ல...
சிவப்பாய் இருப்பதெல்லாம் இரத்தமுமல்ல..
என் சிந்தையை சிதறடித்த உன் வார்த்தையும் மறக்கக்கூடியதல்ல...
கொதிக்கும் உலையை இறக்கி வைத்து விட்டேன்...
கொந்தளிக்கும் மனதை என்ன செய்வது....?
*********************************
பெ.மகேஸ்வரி.