உயிரின்ரெழுத்துகளின் ரணம்

அழகான கவிதை மாளிகையை நமக்காக,
ஆனந்தத்துடன் கட்டி முடித்தேன் மனதினில்.
இருந்திருந்து யார் கண் பட்டதோ..
ஈட்டியாய் என்னிதயத்தை துளைத்துவிட்டது நீ
உதிர்த்த அக்கினிப்பிழம்பான வார்த்தைகள்..
ஊமையாகி நிற்கின்றது சில்சில்லாய் உடைந்த மனது..
எத்துணை வேதனை.. எதற்கிந்த சோதனை?
ஏமாற்றங்களின் மொத்த குத்தகையும் இவள் வசம்தானா?
ஐயங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படாமலேயே,
ஒரு வார்த்தையில் உன் தீர்ப்பை உதிர்த்ததால்,
ஓராயிரம் தேள் கொட்டிய மரண அவஸ்தைக்கு
ஔடதமாய் தோன்றுவது ஒரு துளி விஷம் தான்,,,
அஃதும் இவளால் இயலாததால்..
இனி இவள் உயிரிருந்தும் நடைப்பிணமே....

************************************************

பெ.மகேஸ்வரி

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (8-May-14, 7:02 am)
பார்வை : 93

மேலே