அழகு பார்த்தேன் என் தமிழை
பிறந்த குழந்தைக்கு தமிழில் பெயர் சூட்டி அழகு பார்த்தேன்...
பிறந்தநாள் கேக்கில் தமிழில் எழுத சொல்லி அழகு பார்த்தேன்...
வெள்ளை சட்டையில் தமிழ் வாசகத்தை பொரிக்க சொல்லி அழகு பார்த்தேன்...
கணினியில் என் பெயரை தமிழ் எழுதி அழகு பார்த்தேன்...
இப்படி தமிழை எங்கு வைத்து பார்த்தாலும் அழகாக இருக்கிறதே...
அனால்... இந்த அழகு தமிழை நாம் எங்கே வைத்துள்ளோம்?
பூட்டி வைக்காதீர்கள்... சூடி அழகு பாருங்கள்.....