காதல் தோல்வி கவிதைகள்

சிறிய கோடு
பெரிதாவது
காதல்,
கல்யாணம் ஆவது

வால் பற்றிய தீ
தலை வருகையில்
பனி விழுவது,
மாற்றுச் சிந்தனை

கொலை செய்ய
முடியாதவன்
தற்கொலை
செய்து கொள்வது,
காதல் தோல்வி
கவிதைகள்

விதைகளின் இரவில்
விரல்களின் வீரியம்
விடிந்ததில் வளரும்,
இரவுகளின் விதைகள்

சுடப்படும் நாளில்
சிலையாகி நிற்கிறது
குறி தவறிய
தோட்டாவின்,
வெற்றுப் பயணம்

கவிஜி

எழுதியவர் : கவிஜி (8-May-14, 10:25 am)
பார்வை : 104

மேலே