ஒரு புதிய படைப்பு ,,வாசித்து பாருங்கள்

என் நிழல் போல
நீ என்றும் என்னோடு
உன்னை தொடும் போது
புயல் வந்து தாக்குது

உன் பார்வை
தினம் என்னை
விஷம் போல கொல்லுது
இனி நான் வாழ
நீ வேண்டும் என் நெஞ்சோடு

தொடும் தூரம் நீ இருந்தும்
தொலை தூரம் போல் தெரிகிறதே
உன்னை தொட தினம் ஏங்கி
எனை நானே தொலைத்தேனே

உன்னை காதலிப்பதால்
நானும் கவிஞ்சனடி
நீ என்னோடு பேசினால்
நானும் குழந்தையடி

உன்னை காணாமல்
என் விழிகள் வாடுதே
உன்னை சேராமல்
என் ஆயுள் குறையுதே

என் விழியோடு நீ வந்து
குடியேறு
உன்னை பார்க்க சொல்லி
என் விழிகள் தினம் மன்றாடுதே

பெண்ணே ,என் அழகே
உன்னில் குறையொன்றும் இல்லை கண்ணே .
.........................................................................................
"இக் கவிதையை பின்வரிசையிலும் வாசிக்கலாம்
ஆனாலும் ஒரே அர்த்தத்தையே தரும்
அதாவது இப்படி,

உன்னில் குறையொன்றும் இல்லை கண்ணே
பெண்ணே ,என் அழகே

என் விழிகள் தினம் மன்றாடுதே
உன்னை பார்க்க சொல்லி
குடியேறு
என் விழியோடு நீ வந்து

இப்படி தொடர்ந்து பின் வரிசையிலும் வாசிக்கலாம்..
வாசித்து பாருங்கள் ...

ஏதோ என்னால் முடிந்தது முயற்சித்துள்ளேன் ....
கருத்துக்களை நீங்கள் தான் கூர வேண்டும் ....

எழுதியவர் : ஏனோக் நெகும் (8-May-14, 5:52 pm)
பார்வை : 104

மேலே