ஓசைகளில் எனது ஆசைகள்

கோவில் மணியின்
ஓசையில் கூட
உன் குரலின் ஓசை
கேட்டுவிட ஆசை !!!

கூவும் குயிலின்
பாடலில் கூட
உன் பெயரின் ஓசை
கேட்டுவிட ஆசை !!!

மூங்கிலில் காற்று
உரசும் ஓசையில்
உன் குரலையே
கேட்டுவிட ஆசை !!!

வீணையின் நரம்புகள்
பேசும் ஓசையில்
உன் பெயரையே
உச்சரிக்க ஆசை !!!

கொட்டும் மழையில்
சொட்டும் துளியின் ஓசையில்
உன் பெயரையே
சந்தமாக கேட்க ஆசை !!!

எழுதியவர் : ஜான் பிராங்க்ளின் (8-May-14, 7:23 pm)
பார்வை : 123

மேலே