+மச்சுவீட்டுல மச்சக்காரி+
மச்சுவீட்டுல மச்சக்காரி
அச்சமூட்டுற அச்சக்காரி
பச்சக்குழந்தையா பாத்துசிரிக்கிறா
நச்சுநச்சென மனசகெடுக்கறா
வச்சேன்ஆசைய அவளின்மேலே
தச்சசட்டையா அளவாத்தானே
லட்சக்கவிதைய எனக்குகொடுத்தவ
லட்சம்பாத்ததும் டாட்டாகாட்டுனா
வச்சதுஆசையும் தப்பாவென
முளைக்கிற மீசையும்கேக்க
மீசைக்குசோடியா தாடிவளத்தேன்
ஆசையமறந்து பாடிக்கெடந்தேன்
மச்சுமறந்தேன் மனசவெளுத்தேன்
அச்சங்களையும் பாட்டுபடிச்சேன்
உச்சிவானத்த தொட்டுவிடத்தான்
லட்சியங்கொண்டே நானும்உழைக்கேன்...