ச்சும்மா Mano Red
![](https://eluthu.com/images/loading.gif)
ச்சும்மா,
இது அர்த்தமில்லா
வார்த்தையல்ல,
ஆயிரம் அர்த்தங்கள்
அடங்கிய அபூர்வம்...!!
ச்சும்மா ஒரு பேச்சிற்காக
இதை கேட்கிறேன்,
என்று பேச ஆரம்பித்து
உரையாடல்களில்
உண்மைகளை திருட முடியும்...!!
அடி நெஞ்சில்
ஆணி அடித்தது போல
கேள்வி கேட்டுவிட்டு,
ச்சும்மா விளையாட்டுக்கு
என்று முடித்து விடமுடியும்..!!
எதை வேண்டுமானாலும்
முயற்சி செய்து
முடியாமல் தோற்று போனால்
ச்சும்மா செய்து பார்த்தேன்
என மன்னிப்பு கேட்க முடியும்..!!
நமக்கு பிடிக்காமல் போனால்
ச்சும்மா ச்சும்மா
எதையாவது சொல்லி,
பிடித்தவர்களைக் கூட
பிடிக்காதாவர்களாக்க முடியும்...!!
அழ முடியா சோகத்தில்
ஆறுதல் தேவைப்படாத போது,
ச்சும்மா தான்
எனக்கு ஒன்றும் இல்லை
என நடித்து சிரிக்க முடியும்..!!
என்னால் ச்சும்மா
இருக்க முடியாது,
ச்சும்மா இருப்பதற்கு
கவிதை போல இதைச் சொல்லி
ச்சும்மா சமாளிக்கலாமே
என்று சிரிக்க முடியும்..!!
போதும் போதும்
இதற்கு மேல்
எதையும் என்னால்
ச்சும்மா ச்சும்மா
சொல்ல முடியாது...!!