தாயும் ஆனவர்

நடைபயில கற்றுத்தந்தாய் நீ எனக்கு...
என்னுள்ளே தமிழுக்கும்...
அதனால்...
என் நடையில் உன் சாயல்...
என் நாவில் நெல்கொண்டு
எழுத்திட்ட பேச்சியப்பன் நீ...
ஆதலால் பேச்சும் உன் பொலவே...
தூரலோ...தூற்றலோ...
கைக்குட்டை நனைத்தபோது...
என் தொய்வுநீக்கி தோள்மீதேற்றி...
உலகம் உனக்கு கீழென உணர்த்தியது நீ...
திமிரென்று உணரப்படுவது யாதென்று விளக்கி...
அறிவென்ற திமிரொன்று எனக்களித்தாய்...
எழுத்தறிவித்தவன் இறைவன் எனில்...
எந்தையே...
நீயே என் இறைவன்...