பரம்பொருள் அறிவோம்

வேதங்களின் கூற்று ஒன்றே;
சாதி மத பேதம் எல்லாம்
வேதங்களில் இல்லாதவை.
இறைவனை பிரமன் என்றே
வேதங்கள் சொல்வதறிவோம்.
இறைவனின் பிற பெயரெல்லாம்
பின்னாளில் வந்தவையே.
சடங்குகள் சாத்திரங்கள்
பூசை புனஸ்கார மெல்லாம்
மக்களை ஒருங்கிணைக்க
நம்பிக்கையை வளர்த்திடவே.
பரம்பொருள் தன்னுள் அறிய
வழிகள்பல இருந்த போதும்
த்ன்னிலை ஏதும் அறியாமலே
தவறுகள் மானிடர் செய்வார்.
மனச்சாட்சி வழி நடந்தாலே
நம்மை நாம் அறிந்திடக்கூடும்.
நம்மில் உறையும் பரம்பொருள்தனையும்
உணரும் நிலையைப் பெற்றிடுவோமே.
வேதங்கள் உபநிடதங்கள்
காட்டும் வழியும் இதுவேயாகும்.