காய்களும், காய்க்காத காய்களும்

காக்கைக்குங் காய்காய்க்குங் காட்டு மரங்காய்க்கா
காய்கின்ற வெண்ணிலவுக் காய்!
வட்டிக்காய் வாங்கி வசதிக்காய் உண்போர்க்கு
குட்டிக்காய் எட்டிக்காய் கொள்!
பேருக்காய் காய்க்கும் பெருங்காய் இலவம்
ஊருக்கே பஞ்சு உதிர்ந்து.
மெய்யழகாய் மின்ன மினுக்கும் மெய்யோர்நாள்
பொய்யழகாய் போகும் புதைந்து.
இலக்கணக்காய் காய்க்கின்ற வெண்பா வினத்தில்
புலவர் கனிநாடார் பார்.
மாதுளங்காய் கன்னத்து மாதுளத்துக் காதலிலே
சாதுளமே வீழும் சரிந்து.