நாம ஏமாந்துட்டோம்

வெக்க தாங்கலட சாமி
வெறுங்க்காலுல
நிக்க முடியல
நீங்க கட்டித் தந்த
கட்டுடத்துல.....

அடே...ய்
எங்கட
எங்க புளியமரத்து
பேருந்து நிறுத்தம்?
பூத்துக் கொட்டும்
புங்க மரத்து நிழற்குட?

ஆடு மேக்கணும்
மீனு பிடிக்கணும் - எம்பிள்ளைக்கு
நீச்ச பழக்கணும்
வயக்காட்டுக்குத் தண்ணி பாச்சனும்..

வளர்ச்சி வளர்ச்சின்னு சொல்லி
வாட்டர் சர்வீஸ் லாரி
வந்து நிக்குது
எங்க சந்துக்குள்ள..

அடே...ய்
ஏரிக் குளம் எங்கட?
நாங்க ஏறிப் போன
எரும மாடு எங்கட?

காம்ப்ளான் கண்றாவியெல்லாம்
எதுக்குங்க...
காளையடக்கும் மரபில்
பிறந்தவனுக்கு...

நீச்சத் தண்ணி மொரு
நித்தம் கம்பங்கூழு
ஓடியாடும் எம்பிள்ளைக்கு
பட்டிக்காட்டு புழுதி காத்து
போதுமுங்க பயில்வானாக...

அத்திப்பழம் தெரியாது
அவனுக்கு
வரையாடு தெரியாது.

ஒரு
ஆச்சர்யம் பாருங்க...
ஆப்பிளும் வரிக்குதிரையும்
அப்படியே வரையுது எம்பிள்ள....

அடே..ய்..
எங்க மண்ணுல வெளயாது
ஆப்பிள் பழம்.
எங்க காட்டுல கெடயாது
வரிக்குதிர.

சொந்த வரலாறா
சொல்லிக் கொடுக்க ஒரு
பள்ளிக் கூடம்
இங்க இல்லையட சுந்தரம்.

அறிவு புகட்டுறோமுன்னு சொல்லி
எம்பிள்ள புத்தியில
அநியாயமா குப்பைய கொட்டுறான்
அதட்டி கேட்க இங்க
ஆள்ளில்லட சுந்தரம்.

நம்ம பிள்ளைங்க
எப்படி வாழனும்
எப்ப பேழனும்
என்ன திங்கணும்
எப்படி சாகனும் ன்னு
எவே எவேனோ முடிவு பண்ணுறானுங்க....

நாசமா போச்சு
நாம ஏமாந்துட்டோம் சுந்தரம்...
கெடச்ச லாபத்துக்கு
நம்மள மட்டுமில்ல
இவிங்க
நம்ம பிள்ளைகளையும்
எதோ
பன்னாட்டு நிறுவனத்துக்கு
பண்ணைக் கூலியா வித்துட்டாயிங்கடா....

---தமிழ்தாசன்---

எழுதியவர் : தமிழ்தாசன் (10-May-14, 7:30 pm)
Tanglish : naama emaanthuttom
பார்வை : 91

மேலே