வறுமை

வான் அதிரும் பட்டாசு சத்தம்.....
வீதி மறைத்த விழாக்கோலம் .....
புத்தாடை வாசம் .....
பலகார நெடி.......
சின்னத்திரை சிறப்பு நிகழ்சிகள்.....
இவை
எதையுமே ரசிக்க முடியவில்லை
புதுத்துணி மத்தாப்பு
கேட்டு அழுத
சிறுவனின் விசும்பல் கேட்டபிறகு .........
பார்த்திபன் திலீபன்

எழுதியவர் : பார்த்திபன் திலீபன் (10-May-14, 7:45 pm)
Tanglish : varumai
பார்வை : 122

மேலே