தாயன்பு

தொப்புள் கொடியிலே
இணைந்து-பிரிந்து
தொட்டிலிலே மழலை
நவிழ்ந்து-மகிழ்ந்து
தத்தித்தத்தி தவழ்கையிலே
தானும் தவழ்ந்து
ததிகிடுதோம் ஆடுகையில்
தாளமாய் கலந்து
கற்றிடவே அளவில்லை
என்றுணர்த்தி
காலத்தின் பயன்தன்னை
தனக்குணர்த்தி
பூவே....
உன் சிரிப்பையே
தன்பலப்படுத்தி
உன் வளர்ச்சியையே
சிகர எல்லையாக்கி
முகடுகளில் முட்டாவண்ணம்
முன்நின்று காப்பாளே....
முரண்பாட்டிலும்
உனதெண்ணத்திற்கு
முட்டுக்கட்டை இட்டதில்லை...
உன் முயற்சிக்கு
முழுமூச்சாய் கட்டும் வலையே
உனது தாயன்புதானடி
என் தங்கமே.....
அன்னையர் தினவாழ்த்துக்கள்.....