Malligai - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Malligai |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 17-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 121 |
புள்ளி | : 14 |
நண்பனே ...
நடந்துவந்த பாதையை
மறந்துவிடுபவர்களுக்கு
மத்தியில் ...
நான்
கடந்துவந்த பாதையின்
கால்தடங்கள்
'காயமுறுதலை'கூட
காணச்சகியாதவன் நீ ..
என் உயிரினை தாங்கி
மனிதவுருவில் உள்ள
என் இன்னொரு
மனசாட்சி நீ ..
'நண்பன்' என்ற சொல்லின்
அர்த்தங்களை
அகராதிகளில்
தேடிக்கொண்டிருக்கையில்
'அதன் அர்த்தமாய்' என் முன்னே
வந்தவன் நீ ..
தோல்விகள் கூட என்
தோழனிடத்தில்
படு தோல்வி
அடைந்துவிடும்மெனகூறி
துவண்டிருந்த என்னையும்
துடித்தெழச்செய்தவன் நீ ..
உயிரினை
காதலர்களும் தருகிறார்கள்
பரிமாறிக்கொள்வதன் மூலம்
ஆனால்
அது
பண்டமாற்று அல்லவா ?
நீ
உயிரினையும்
தருக
தொப்புள் கொடியிலே
இணைந்து-பிரிந்து
தொட்டிலிலே மழலை
நவிழ்ந்து-மகிழ்ந்து
தத்தித்தத்தி தவழ்கையிலே
தானும் தவழ்ந்து
ததிகிடுதோம் ஆடுகையில்
தாளமாய் கலந்து
கற்றிடவே அளவில்லை
என்றுணர்த்தி
காலத்தின் பயன்தன்னை
தனக்குணர்த்தி
பூவே....
உன் சிரிப்பையே
தன்பலப்படுத்தி
உன் வளர்ச்சியையே
சிகர எல்லையாக்கி
முகடுகளில் முட்டாவண்ணம்
முன்நின்று காப்பாளே....
முரண்பாட்டிலும்
உனதெண்ணத்திற்கு
முட்டுக்கட்டை இட்டதில்லை...
உன் முயற்சிக்கு
முழுமூச்சாய் கட்டும் வலையே
உனது தாயன்புதானடி
என் தங்கமே.....
அன்னையர் தினவாழ்த்துக்கள்.....
என்னை யாரென
எனக்கு அறிமுகப்படுத்திய
யாரோ ஒருவனிற்காக
என் இனிய எழுதுகோல்
எழுதுவது ..
என் மீது
நான் கொண்ட பேரன்பிற்கு
நிகர் ஏதுமில்லை
என்றேன் !
பொய்யாக்கினாய் நீயடா ...
என்னை நேசித்து !!
வார்த்தைகளுக்குக் கூட
வலிக்காதவண்ணம் பேசும்
மெல்லிய மேனியாளையும்
நடு நடுங்க
வைத்தாய் நீ ,
பார்வையாலேயே !!
எழுத்துகளை நேசிக்கும்
எழுதுகோலாகிய இவள்
ரசிப்பதெல்லாம் உன்
கையெழுத்தைத்தான்..
உன் மாயையாலே !!
இதற்கும் மேலே,
வாழ்க்கை புரியவில்லை
என்றேன் ,நான் ..
காதலிக்கக்
கற்றுத்தந்தாயடா நீ !!!
சின்ன பெண்ணே ...!!
உன் சினுங்களில்..
சிறகுடைந்து
போகிறேன்...
உன் சிரிப்பினில்
எனை மறந்து போகிறேன்...
உன் அழகினில்
எனை இழந்து போகிறேன்
உன் அன்பில் மட்டுமே
எனை உணர்ந்து வாழ்கிறேன் ..........!!!!
உன் அன்பில் மட்டுமே....
நான் வாழ்கிறேன்....
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
$$
$$
கமெண்ட்ஸ் ப்ளீஸ்.....!!!!!!!!!!!!!
$$
$$
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
உன் வார்த்தை என் மனதை
கொன்றபோதும்..
வெறுக்கலியே உன்னை நான்..!!
நொந்தமனம் ஆறாது
என்றறிந்தும்..
மாறலியே இன்றும் நான்..!!
உன் கண்ணீர் பார்த்ததுமே
தாயாட்டும்..
பொறுக்கலியே என் மனது..!!
நீ கொடுத்த வலிமறந்தும்
உனக்காக....
வேண்டுறேனே இராப்பகலாய்..!!
நான் அழுதும் வாழுறேனே
உன் சந்தோஷம்
பார்த்து தினம்..!!
நீ அழுதா தாங்கலியே
என் உள்மனது...
உன் வலிஉணர்ந்தே
சாகுது இங்கு என் உசிரு..!!!
...கவிபாரதி...
மின்னலாய்
இடியாய்
மழையாய்
பொழிவது....
காதல்....!!!!!
புரட்டினால் புரியும் புதுவரி
திரட்டினால் உனக்கு தித்திப்பு
மனத்தில் தோன்றா மகத்துவமும்
மனக்கண் முன்னே நிற்குமே...
அமுதசுரபி போலவே
முடிவுமிதற்கு இல்லையே...
எல்லையில்லா சொற்களும்
ஏராளமாய் அறியலாம். ..
படித்து நீயும் பழகினால்
பண்புகளும் வளருமே....
முகவரியும் இல்லையே
முற்றுப்புள்ளி வைத்திடாய்...
முயன்று நீயும் கற்பதால்
முன்னேறுவாய் வாழ்வினில்..!
வளர்த்தால் பசுமை
வானுயர்ந்தால் வரும் மழை
உண்ண உணவு
ஊனத்திற்கும் மருந்து
உயிர் வாழ பிராணவாயு
உலகே உன்னால் ஒளிமயம்
நீ செழிக்க. ,நாடு செழிக்கும்
கூட்டத்தோடு குருவிகள் -அங்கே
கூடி வாழ கற்றன.....
கூடி வாழ கோடிநன்மை
கூறியது உனைக்கண்டோ...?
ஆடிப்பாடி விலங்குகள்
அயர்ந்ததுன் நிழலிலே..
காய்கனிகள் இலைகளும்
கணக்கின்றி பயன்தரும். ..
காணக்கிடைக்கா பூக்களும்
கண்கள் கவர ஒளிருமே...
இத்தனையும் கொடுக்கிறாய்
கோடைக் கொடுமை போக்கிடும்
கொடைவள்ளலும் நீதானோ.....!!!!!
புன்னகைத்து வரும் எத்தனையோ
முகங்கள்
புலிகளின்
பற்களாய் இன்று
கடித்து குதற நினைக்கிறது !
விலாசமற்று வரும் எத்தனையோ
பெயர்கள்
அனாமேதய
ஐடி எனும் பற்களால்
கவிதைகளை கடித்துக் குதறுவதேன் ?
விருப்பமாய் வரும் எத்தனையோ
தோழர்கள்
சுகமான
கருத்துக்களை
சுபீட்சமாய்
சொல்கையிலே வண்ண வண்ண கனவுகளூருது
கற்பனை சுமந்து வரும் எத்தனையோ
கவிதைகளை
கழிந்து போன
விலங்கு மலமாய்
முகத்திலடித்து
முகமூடி கலையா வேந்தனாவது தகுமா ?
களமமைக்கும் இந்த தளத்தில் எத்தனையோ
அன்பர்கள்
நண்பர்கள்
கவிஞர்கள்
இவர்கள் வாய் குளிர
வாழ்த்து எடுத்தல் தகாமல் போகுமோ ?
வளர்த்தால் பசுமை
வானுயர்ந்தால் வரும் மழை
உண்ண உணவு
ஊனத்திற்கும் மருந்து
உயிர் வாழ பிராணவாயு
உலகே உன்னால் ஒளிமயம்
நீ செழிக்க. ,நாடு செழிக்கும்
கூட்டத்தோடு குருவிகள் -அங்கே
கூடி வாழ கற்றன.....
கூடி வாழ கோடிநன்மை
கூறியது உனைக்கண்டோ...?
ஆடிப்பாடி விலங்குகள்
அயர்ந்ததுன் நிழலிலே..
காய்கனிகள் இலைகளும்
கணக்கின்றி பயன்தரும். ..
காணக்கிடைக்கா பூக்களும்
கண்கள் கவர ஒளிருமே...
இத்தனையும் கொடுக்கிறாய்
கோடைக் கொடுமை போக்கிடும்
கொடைவள்ளலும் நீதானோ.....!!!!!
செங்கமலப் பூக்கள் பூக்கும்
பூந்தோட்டமில்லை...
சேர்ந்தங்கு விளையாட-ஒரு
மைதானமும் இல்லை...
அடுக்குமேலே அடுக்கி ஒரு
அறைகளுமில்லை...
ஆளுக்கொரு அறைகளெனப்
பிரிக்கவ மில்லை...
ஆளுயரக் கதவுகளுமங்கே
அமைக்கவுமில்லை....
அழகான வனப்புடனே
படைக்கவுமில்லை..
முகம்பார்க்கும் தரையையும்
தடவியதில்லை....
முடிமுதல் அடி வரை
உயரமுமில்லை....
முற்றத்தில் ஆடிடவே
ஊஞ்சலும் இல்லை. ..
முன்னேயும் பின்னேயும்
படித்ததும் இல்லை. ...
அலமாரியதில் துணிகளையும்
அடுக்கியதும் இல்லை. ...
அழகழகாய் எப்போதும்
உடுத்தியதும் இல்லை. ...
இத்தனையும் எப்போது
கிடைக்குமென்றே...-என்
தெருவோரக் குடிசையிலே
கனவு கண்டேன். ...!!!